|
அடிப்படைத் தேவைகள்
|
பாவனையாளர்களின் வழியுரிமையை உறுதிப்படுத்துகின்ற அடிப்படைப் பண்டங்கள் மற்றும் சேவைகளை அதாவது உணவு, நீர், உடை, வீடு, சகாதாரமும் துப்பரவேற்பாடும், கல்வி மற்றும் பயனுறுதிமிக்க தொழிலைப் புரிவதற்கான உரிமை. |
காப்பு அல்லது பாதுகாவல்
|
உடல் நலத்திற்கும் உயிருக்கும் பங்கமேற்படுத்தக்கூடிய பண்டங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்படுவதிலிருந்து / வியாபாரத்திலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை. |
தகவல்கள்
|
விழிப்பூட்டல் மற்றும் விவேகமான தெரிவுக்கு ஆதாரமாக அமைகின்ற உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கான உரிமை, நேர்மையற்ற அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய அறிவித்தல்கள் அல்லது பிரச்சாரங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமை. |
தெரிவு
|
சிறந்த தரம் மற்றும் விவரக்கூற்றுக்களைக் கொண்ட பண்டங்களையும் சேவைகளையும், போட்டி விலைகளின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கான உரிமை. |
செவிமடுக்கச் செய்வித்தல்
|
அரச கொள்கை வகுத்தலின் போது பாவனையாளர்களின் தேவைகள் மற்றும் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தவும் அவற்றைச் செவிமடுக்கச் செய்விப்பதற்குமான உரிமை. |
நிவாரணங்கள் / பரிகாரங்கள்
|
போலியான தகவல்கள், பாதகமான பண்டங்கள் மற்றும் திருப்திகரமற்ற சேவைகள் வழங்கப்படுவதனால் இடம் பெறுகின்ற சந்தை அநீதிக்கு எதிராக நட்டஈடு அல்லது நிவாரணங்களைப் பெறுவதற்கான உரிமை. |
பாவனையாளர் கல்வி
|
சந்தையில் சரியான பாவனையாளரொருவராக செயலாற்றுவதற்கான அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொள்வதற்கான உரிமை. |
ஆரோக்கியமான சுற்றாடல்
|
உயிருக்கு அச்சுறுத்தலாகவோ ஆபத்தானதாகவோ அமையாததும் பெருமையும் சாதகமான வாழ்க்கையை கழிப்பதற்கு வாய்ப்பளிக்கின்றதுமான சுற்றுச்சூழலில் வசிப்பதற்கும் தொழில்புரிவதற்குமான உரிமை. |
பாவனையாளரின் கடமைகள்
பாவனையாளர் மக்கட் சமுகத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக ஒவ்வொரு பாவனையாளரினதும் உரிமைகள் பற்றி விழிப்பூட்டப்பட்டிருக்க வேண்டுமென்பதோடு கடமைகள் (பொறுப்புகள்) சிலவற்றையும் பூர்த்திசெய்திருத்தல் வேண்டுமென்பதை பானையாளர் சர்வதேசம் வலியுறுத்துகின்றது.
சிறந்த புரிந்துணர்வு
|
பாவனையாளர் சட்டதிட்டங்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் மாத்திரமன்றி சேவை வழங்கல் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் தொடர்பான மற்றும் சேவைகளை ஈடேற்றிக்கொள்வதற்காக வரிசைக்கிரமத்தை அமைத்தக்கொள்ள வேண்டிய விதம் பற்றிய புரிந்துணர்வு. |
செயலூக்கம்
|
தனது அறிவினை பயன்படுத்தி பாவனையாளர்களின் சிக்கல்களுக்கு தீர்வுகாண முனைப்பாக பங்களிப்புச் செய்தல். |
சமூக ஈடுபாடு
|
பாவனையாளரையும் சுற்றாடலையும் பாதுகாக்க தனது பங்களிப்பினைத் தாராளமாக வழங்க அர்ப்பணிப்புடன் செயலாற்றல். |
சுற்றாடல் பற்றிய புரிந்துணர்வு
|
சிறந்த வாழ்க்கை முறையைக் கழிக்கப் பொருத்தமான பௌதீக மற்றும் உளரீதியான சுற்றாடலைப் பாதகாத்துக்கொள்ளத் தேவையான தகவல்கள் நிலைமைகள் பற்றிய அறிவினை ஏற்படுத்திக்கொள்ளல். |
சகோதரத்துவம்
|
அனைத்துப் பாவனையாளர்களுக்கும் சிக்கல்கள் தோன்றுகின்றனவென்பதை விளங்கிக்கொண்டு கூட்டாகத் தீர்வுகளைத் திட்டமிடுவதற்காக ஒரே நோக்கத்தின் அடிப்படையில் செயலாற்றக்கூடிய இயலுமை. |
|