English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டமானது 2003 ஜனவரி 09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினை தாபிப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. பாவழைனயாளர் அலுவல்கள் அதிகாரசபையானது கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சின் நோக்கெல்லையின் கீழ் தொழிற்பட்டு வருகின்றது. புதிய சட்டமானது பின்வரும் சட்டங்களை இரத்துச் செய்துள்ளது.

  • 1979 ஆம் அண்டின் 01 ஆம் இல. பாவனையாளர் பாதுகாப்பு சட்டம்
  • 1987 ஆம் ஆண்டின் 01 ஆம் இல. நியாய வியாபார ஆணைக்குழு
  • விலைக்கட்டுப்பாட்டுச் சட்டம்  (அத்தியாயாம்173)

பாஅஅ சட்டமானது பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது:

  • பகுதி i – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினை தாபித்தல்
  • பகுதி ii – வர்த்தக ஒழுங்குவிதி
  • பகுதி iii – போட்டி ஊக்குவிப்பு மற்றும் பாவனையாளர் நலன்கள்
  • பகுதி iv – பாவனையாளர் அலுவல்கள் பேரவை
  • பகுதி v – அதிகாரசபையின் நிதியம்
  • பகுதி vi – அதிகாரசபையின் பதவியினர்
  • பகுதி vii – பொது

சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் சில புதிய விடயங்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தில் கூட்டிணைக்கப்பட்டுள்ளன. இது பாவனையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது தற்போதைய காலத்திற்கேற்றவாறான புதிய பொருளாதார கட்டளைகள் மற்றும் வர்த்தக நடைமுறைகளுக்கமைவாக நுகர்வோரின் நலன்கைள மையப்படுத்தி தாபிக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோரின் நலன்களை மட்டுமல்லாது நியாயமற்ற வகையில் பாதிக்கப்படும் வர்த்தகர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றது. சட்டத்தின் ஏற்பாடுகளினுள் பொருட்கள் மற்றும் சேவைகளும்  உள்ளடக்கப்படுகின்றன.

புதுப்பிக்கப்பட்டது: 13-03-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.