|
அதிகாரசபை சட்டத்தின் கீழான தவறுகள |
- ஏதேனும் பண்டத்தில் உள்ள சுட்டுத்தண்டு, விவரணம் அல்லது விலைக் குறிப்பை அகற்றுதல், மாற்றுதல், துடைத்தழித்தல், தேய்த்தழித்தல் அல்லது உருவழிக்கின்ற அல்லது அவ்வாறானவற்றைச் செய்த பண்டங்களை விற்பனை செய்கின்ற நிலைமை. (பிரிவு 10)
- பண்டத்தின் உற்பத்தி, இறக்குமதி, சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல்,; சேமித்து வைத்தல், விற்றல் சம்பந்தமாக விடுக்கப்பட்ட பணிப்புரைகளை மீறுதல். (பிரிவு 10)
- பண்டங்களுக்கு சுட்டுத்துண்டு ஒட்டுதல், விலை குறித்தல், பொதிகட்டுதல், விற்பனை செய்தல் தொடர்பில் விடுக்கப்பட்ட வேறேதேனும் பணிப்புரைகளை அமுலாக்கத் தவறுதல். (பிரிவு 10)
- பணிக்கப்பட்ட விலைக்கு அல்லது குறிக்கப்பட்ட விலைக்கு மேலாக பண்டங்களை விற்பனை செய்தல். (பிரிவு 11)
- அதிகாரசபையினால் விதித்துரைக்கப்பட்ட நியமங்களுக்கும் அளவுக் குறிப்பீடுகளுக்கும் அமைவாக பண்டங்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும் தவறுதல் (பிரிவு 13)
- அதிகாரசபையினால் விதித்துரைக்கப்பட்ட நியமங்களையும் அளவுக் குறிப்பீடுகளையும் மீறுதல் அல்லது உற்பத்தியாளரால் அல்லது வியாபாரியால் வழங்கப்பட்ட கட்டுறுத்தல்களை மீறுதல். (பிரிவு 13)
- உடன்பட்ட ஆகக்கூடிய விலை அல்லது நியமத்துடன் தொடர்புடையதாக பண்டங்களை வழங்குவதாக எவரேனும் உற்பத்தியாளர் அல்லது வியாபாரியுடன் அதிகாரசபை ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைகளின் நிபந்தனைகளை மீறுதல். (பிரிவு 14)
- வியாபாரியால் தனதுடைமையில் அல்லது கட்டுக்காவலில் அல்லது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பண்டத்தை விற்க மறுத்தல். (பிரிவு 15)
- வியாபாரியால் தனதுடைமையில் அல்லது கட்டுக்காவலில் அல்லது கட்டுப்பாட்டில் பண்டங்கள் இல்லையென மறுக்கப்படல் அல்லது நிபந்தனைக்கமைய விற்றல். (பிரிவு 16)
- எவரேனும் வியாபாரியால் வழமையான சொந்தத் தேவைகளுக்கு மேலதிகமாக எவையேனும் பண்டங்களை பதுக்கிவைத்தல். (பிரிவு 17)
- பண்டங்களுக்கு விலைகுறித்தல் அல்லது விலைப்பட்டியலை வர்த்தக நிலையத்தில் துலாம்பரமாக வெளிக்காட்டி வைக்காமை அல்லது அவ்வாறு செய்ய மறுத்தல். (பிரிவு 26)
- வியாபாரியொருவர் பாவனையாளரை பிழைவழி உய்;கும் அல்லது ஏமாற்றும் இயல்புடைய நடத்தையில் ஈடுபடல். (பிரிவு 30)
- பண்டங்கள் அல்லது சேவைகள் குறிப்பிட்டவொரு நியமத்திலானது எனக் கூறுதல், பண்டங்கள் புதியனவென பொய்யாகத் திரித்துக் காட்டுதல், விலையை அதிகரித்தல் அல்லது விலைக்குறைப்புக்கள் பற்றிய பொய்யான கூற்றுக்களை விடுத்தல் அல்லது அவ்வாறு பிழைவழி உய்க்கும் வேறு செயல்களில் ஈடுபடல். (பிரிவு 31)
- பண்டங்கள் அல்லது சேவைகளை வழங்குதல் தொடர்பான கட்டுறுத்தல்கள் (உத்தரவாதச் சான்றிதழ்) அல்லது அவற்றில் அடங்கியுள்ள நிபந்தனைகளை மீறுதல். (பிரிவு 32)
- போட்டியெதிர்ப்பு நடைமுறைகள் அல்லது தனியுரிமைச் செயற்பாடுகளில் ஈடுபடல். (பிரிவு 34)
- அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குமாறு அதிகாரசபை வேண்டுகோள் விடுக்குமிடத்து அத்தகவல்களை வழங்கத் தவறுதல் அல்லது தகவல்களை வழங்க மறுத்தல். (பிரிவு 57)
- அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற புலனாய்வுகளில் பங்கேற்கத் தவறுதல். (பிரிவு 57)
|
|
Last Updated on Tuesday, 21 December 2010 07:46 |