English (United Kingdom)Sinhala (Sri Lanka)

  • Decrease font size
  • Default font size
  • Increase font size
  • default color
  • cyan color
  • orange color
  • red color
முகப்பு பாவனையாளர் கல்வி தலைப்பு மடல்
தலைப்பு மடல்

விழிப்பூட்டப்பட்ட பாவனையாளர் பாதுகாக்கப்பட்ட பாவனையாளர் ஆவாh

'சகல பிரசைகளும் பாவனையாளர்களே. பொருளாதாரத் துறையில் மிகப் பெரிய அடுக்காக அவர்கள் அமைவதோடு, அரச மற்றும் தனியார் ஆகிய எல்லாத் துறையிலும் தீர்மானங்களால் பாதிக்கப்படுபவர்களும் அவர்களே.'

ஜோன் எவ் கென்னடி
அமெரிக்காவின் முன்னாள் சனாதிபதி

சந்தையில் பாலுணவுகள், இறைச்சியும் இறைச்சி சார்ந்த உற்பத்திகளும், மரபணு ரீதியான விருத்தி செய்யப்பட்ட உணவுகள், பழங்கள், குளிர் பானங்கள், உணவாகப் பாவிக்கக்கூடிய எண்ணெய் போன்ற பலவிதமான பண்டங்கள் இருந்த போதிலும் துரதிஷ;டவசமாக பாவனையாளர்களுக்கு இவற்றில் அடங்கியுள்ள பொருட்கள் பற்றிய புரிந்துணர்வு இல்லையெனக் கூறலாம். சந்தைப் பொருளாதாரத்தில் உற்பத்தியாளர் தமது இலாபத்தை உச்ச அளவில் பெற முயற்சிப்பதால் இது பற்றி கரிசனை கொள்வதில்லை. பாவனையாளரின் உயிருக்கோ உடல் நலத்திற்கோ பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய மின்சார உபகரணங்களும் துணைப்பொருட்களும், எல் பி கேஸ் சிலிண்டர், பற்றரி போன்ற பண்டங்களையோ சேவைகளையோ உற்பத்தி செய்யும் போது அதனோடு தொடர்புடைய நியமங்கள், அளவுக் குறிப்பீடுகள் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குவிதிகளைக்கூட உற்பத்தியாளர்கள் கருத்திற் கொள்வதில்லை. இதன் காரணமாக அத்தகைய பண்டங்கள் மற்றும் சேவைகளிலிருந்து திடீர் விபத்துக்கள் தோன்றுதல், செயற்கையான சுவையூட்டிகள் மற்றும் நிறங்கள் அடங்கிய காய்கறி, பழங்களைப் பாவிப்பதால் உடலுக்கும் உயிருக்கம் பாதகமான நிலைமைகள் தோன்றக்கூடும். இதற்கு மேலதிகமாக பாவனையாளர்களைப் பிழைவழி உய்க்கும் வர்த்தக விளம்பரங்களின் பிரச்சாரம் மூலமாக பாவனையாளர்களின் நடத்தைப் போக்குகளைத் துரிதமாக மாற்றுவதிலும் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலே குறிப்பிட்ட சிக்கல்களின் மத்தியில் பாவனையாளார்களால் பண்டங்களும் சேவைகளும் கொள்வனவு செய்யப்படுகையில் அவற்றில் உள்ளடங்கிய விபரங்கள் பற்றி கவனஞ் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் பாவனையாளர்கள் என்ற வகையில் தமது நோக்கங்களை ஈடேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுத்துக்கொள்ளல் வேண்டும்.

சட்டங்களையும் பிரமாணங்களையும் ஆக்கும் போதும் அவற்றை அமுலாக்கும் போதும் அரசாங்கம் மிக முக்கியமான பங்கினை வகிப்பதோடு பாவனையாளர் பாதுகாப்பு பற்றிய பிரமாணங்கள் பற்றிப் பாவனையாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். எனவே பாவனையாளர் கல்வி என்பது முக்கியத்துவம் வகிக்கின்றது.

பாவனையாளர்களின் உரிமைகள், பாவனையாளரின் கடமைகள் மற்றும் பாவனையாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பான விளக்கத்தைப் பெற பாவனையாளர் தாம் கொள்வனவு செய்யும் பண்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள, சந்தை நிலைமை பற்றி விளங்கிக்கொள்ள, சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரங்கள் மூலமாக வழங்கப்படுகின்ற தகவல்கள் பற்றி சரியாக அறிந்துகொள்ள பாவனையாளர் கல்வி காரணமாக அமைகின்றது.

Last Updated on Tuesday, 22 June 2010 07:29