English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

போட்டி ஊக்குவிப்பு

  • பொது மக்களின் நலன்களுக்கெதிராக போட்டி எதிர் செயற்பாடுகள் மீது தலையிடுதல்
    பொதுமக்களின் நலன்களுக்கெதிராக தொழிற்படும் போட்டி எதிர் செயற்பாடுகளுக்கான சாத்தியப்பாட்டினை இனங்காண்பதற்கான எமது சொந்த பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • வியாபாரம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையளுதல்.
    குற்றம் சாட்டப்பட்ட போட்டி எதிர் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் வியாபாரம் முறைப்பாட்டினை மேற்கொள்ள முடியும் என்பதுடன் தடைசெய்யப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எழுத்துமூலமான சமர்ப்பித்தல்களை பாவனையாளர் அலுவல்கள் அதிகாதரசபைக்கு மேற்கொள்ள முடியும்.
    • போட்டி எதிர் செய்றபாடு மீதான சாட்சியத்தின் அடிப்படையில் விசாரணை நடாத்தப்பட்டு பாவனையாளர் அலுவல்கள் பேரவைக்கு குறிப்பீடு செய்யப்படும். நடைமுறையிலுள்ள போட்டி எதிர் செயற்பாடானது திருப்தியானது என பேரவை கருதுமாயின் அச்செயற்பாட்டினை ஆதரவளிக்கும் அல்லது அதற்கு அதிகாரமளிக்கும். அச்செயற்பாடானது “பொது மக்களின் நலன்கள்” இற்கு எதிரானதாக அல்லது பாதிப்ப்னதாக அமையுமாயின் அச் செயற்பாட்டினை பேரவையானது எதிர்க்கும் அல்லது அதனை முடிவுக்கு கொண்டு வரும்.  
    • தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீது அதிகாரசபையானது குற்றத்தின் தன்மையினைக் கருத்தில் கொண்டு விசாரணையினை நடாத்தி வழக்குத் தாக்கல் செய்யும்.
      • சந்தை கட்டமைப்பு மற்றும் கையாளுதலை இனங்காணுதல்
        புள்ளிவிபர தரவு சேகரிப்பு மற்றும் சந்தை நிலைமைகளின் பகுப்பாய்வு என்பன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சந்தை மற்றும் பொருளாதாரத்தில் வினைத்திறனை பெறுவதனை நோக்கமாகக் கொண்டது.
      • சந்தை ஆராய்ச்சி, பாதுப்பு குறித்து பரிந்துரை செய்தலும் விலையினை கண்காணிப்பு செய்தலும்
        சந்தையில் போட்டியினை ஊக்குவிக்கும் நோக்குடன், அதிகாரசபையானது ஆதிக்கம் செலுத்தும் கைத்தொழில்கள் மீது போட்டி ஊக்குவிப்பு பிரிவினூடாக அதன் பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளது.
      • ஆரோக்கியமான போட்டி தொடர்பான விழிப்புணர்வு
        முறைப்படியான பாவனையாளர் பாதுகாப்பிற்கான பாவனையாளர் சிறப்புரிமையின் கீழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டம் மீறப்படுவதனை தடுக்கும் பொருட்டு போட்டி மற்றும் ஊக்குவிப்பு பிரிவானது வியாபாரம்/வர்த்தகத்திற்குப் பொருத்தமான மூலப் பொருள் குறித்து விழிப்புணர்வினை விருத்தி செய்துள்ளது. வர்த்தகத்தினால் எதிர்கொள்ளப்படும் நடைமுறை போட்டி எதிர் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாம் ஒன்று சேர்ந்து கலந்துரையாடல் மன்றமொன்றினை ஏற்பாடு செய்யுமாறு நாம் முன்மொழிகின்றோம்.
      • போட்டியை வழங்குவதற்காக தொழிற்படு துறை மட்டங்களைப் பேணுதல்
        தொழிற்படு துறை மட்டத்தின் ஊக்குவிப்பினூடாக உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாத்தல். இது தொடர்பில் சில நுகர்வுப் பொருட்களில் இறக்குமதியின் போதே ஆக்கூடிய சில்லைறை விலை பொறிக்கப்பட்டிருப்பது அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இது இலங்கை சுங்கத் திணைத்துடன் இணைந்து இப்பிரிவினால் கண்காணிக்கப்படுகின்றது.

பணிப்பாளர்,
போட்டி ஊக்குவிப்பு,
பாவனையாளர் அலுவல்கள் அதிகாசபை,
இல.27, வொக்ஸோல் வீதி,
கொழும்பு 02.

புதுப்பிக்கப்பட்டது: 13-03-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.