English (United Kingdom)Sinhala (Sri Lanka)

  • Decrease font size
  • Default font size
  • Increase font size
  • default color
  • cyan color
  • orange color
  • red color
முகப்பு தொடர்புகள்
தொடர்புகள PDF Print மின்னஞ்சல்

பாவனையாளர்களுக்கு வலுவூட்டவும் போட்டித்தன்மை மேம்பாட்டுச் செயற்பாடுகளைத் தூண்டுவதற்காகவும் உள்ளூர் மற்றும் சர்வதேச மட்டத்திலான பல ஒழுங்கமைப்புக்கள் காணப்படுகின்றன.

இலங்கை நிறுவனங்கள் -

தனித்துவமான சட்டதிட்டங்களைப் பயன்படுத்தி இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒன்றுக்கொன்று மாறுபட்ட பல்வேறு நிறுவனங்கள் மூலமாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பணிகளை ஈடேற்ற உதவி வழங்கப்படுகின்றது. மேலும் இச்சட்டதிட்டங்கள் மூலமாக குறித்துரைக்கப்பட்ட பண்டங்கள் மற்றும் பாவனையாளர் நலன் நோக்கத்தை அடையும் பொருட்டு 2003 இன் 09 ஆம் இலக்க, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தில் எதிர்பார்த்த எல்லலைகளுக்கான காப்பீடு வழங்கப்படுகின்றது.

  1. கூட்டுறவுத்துறை, உள்ளக வர்த்தக அமைச்சு
  2. தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு - www.trc.gov.lk
    நிலையான மற்றும் செல்லிடத் தொலைபேசி சேவைகளை வழங்குதலும் அதனோடு தொடர்புடைய சேவை நிபந்தனைகள் மற்றும் வரி சம்பந்தமாக அமுலில் உள்ள சட்டவிதிகள் இதில் அடங்கும்.
  3. இலங்கை தரக் கட்டளைங்கள் நிறுவகம் - www.nsf.ac.lk/slsi
    உள்நாட்டில் உற்பத்தி செய்தோ இறக்குமதி செய்தோ இலங்கைச் சந்தையில் சந்தைப்படுத்துகின்ற தனித்துவமான பண்ட வகைகளுக்காக பேணிவரப்பட வேண்டிய நியமங்கள் விதிக்கப்படும்.
  4. தேசிய அபாயகரமான ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை - www.nddcb.gov.lk
    மருந்துப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதி, உற்பத்தி அல்லது வியாபாரத்திற்கான ஒழுங்குவிதிகள் அடங்கும்.
  5. மத்திய சுற்றாடல் அதிகாரசபை - www.cea.lk
    சுற்றாடலைப் பாதுகாத்தலும் பொதுமக்களுக்கு பாதகமாக அமையக்கூடிய வண்ணமோ சுகாதாரப் பாதுகாப்பற்ற வகையிலோ கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தல், வளி மாசுபாட்டுக்கான ஆகக் குறைந்த நியமங்களை விதிக்க அவசியமான ஒழுங்குவிதிகள் அடங்கும்.
  6. தேசிய புலமைச் சொத்து அலுவலகம - www.nipo.lk
    ஆக்கவுரிமையை வழங்குதலும் புலமைச் சொத்து உரிமைகளை மீறுதல் சம்பந்தமான முறைப்பாடுகளை புலன்விசாரணை செய்வதன் மூலமாக புத்தாக்குநர்களை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் இடம் பெறுகின்றது.