English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

நாணயக்கார என்ரபிறைஸிற்கு எதிராக காலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பொழிப்பு

நாணயக்கார என்ரபிறைஸிற்கு எதிராக காலி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பொழிப்பு

இந்த வழக்கானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் நாணயக்கார என்ரபிறைஸிற்கு எதிராக, இறக்குமதி செய்து விற்பனை செய்ப்பட்ட மின்சார துவிச்சக்கர வண்டியொன்றுக்கு அதன் கட்டுறுறத்துக் காலப்பகுதியினுள் ஏற்பட்ட பழுது தொடர்பில் குறித்த துவிச்சக்கர வண்டியினைக் கொள்வனவு செய்த பாவனையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சட்டத்தின் பிரிவு 13(3) இன் கீழ் விசாரணை மேற்கொண்டதன் பின்னர், பாதிப்புக்குள்ளான பாவனையாளருக்கு அவருக்கு ஏற்பட்ட இழப்புக்கான பணத்தை மீளக் கையளிக்குமாறு குறித்த வியாபாரிக்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் கட்டளையிடப்பட்டது.

குறித்த வியாபாரி அக்கட்டளைக்கிணங்கிச் செயற்படத் தவறியமையினால், பிரிவு 13(6) இன் நியதிகளின்படி, குறித்த கட்டளையினை அமுல்படுத்துமாறு காலி நீதவான் நீதிமன்றுக்கு கோரிக்கையொன்று விடுக்கப்பட்டது.

நீதவான் நீதிமன்றானது வழக்கு விசாரணையினை மேற்கொள்வதற்கு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வழக்குக்கான குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்வதற்கான கட்டளையொன்றினை பிறப்பித்தது.

மேற்குறித்த விடயத்தினைக் கருத்தில் கொண்டு, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது குறித்த தீர்ப்புக்கெதிராக காலி உயர் நீதிமன்றித்தில் மேன் முறையீடு ஒன்றினைச் செய்தது. ஏனெனில், பாவனையாளர் அலுவல்கள் அகாரசபையானது, நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையொன்றினை தாக்கல் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் எதுவுமில்லையெனவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வழங்கப்படும் கட்டளையினை நீதவான் நீதிமன்றமானது அமுல்படுத்த வேண்டுமெனவும் அதன்போது விளக்கமளித்தது.

இத்தகைய கோரிக்கையினைச் சமர்ப்பிக்கும் போது நீதவான் நீதிமன்ற சட்ட அதிகாரமானது, குறித்த வியாபாரியினால் பாதிப்புக்குள்ளான பாவனையாளருக்கு செலுத்த வேண்டியதாக வழங்கப்பட வேண்டிய தொகையினை தண்டமாக அறவீடு செய்வதுடன் மட்டுப்படுத்தப்படுவதால், கற்றறிந்த நீதவான் 2014.03.27 ஆம் திகதியன்று வழங்கிய கட்டளையினை இரத்துச் செய்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் பாதிக்கப்பட்ட தரப்புக்கு சார்பாக வழங்கிய கட்டளையினை உள்ளவாறே நடைமுறைப்படுத்துமாறு கற்றறிந்த நீதவானுக்கு, இருதரப்புக்களின் வாதப் பிரதி வாதங்களின் பின்னர் 2015.11.05 ஆம் திகதியன்று காலி உயர் நீதிமன்றத்தினால் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டது.

அதற்கிணங்க, ரூபா.2,500/- கட்டணத்திற்குட்பட்ட வகையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்டவாறான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்டது: 02-05-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.