English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எதிராளி நியூ சண் டிரேடிங் தனியார் லிமிட்டட்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எதிராளி நியூ சண் டிரேடிங் தனியார் லிமிட்டட் 

இந்த வழக்கானது நியூ சண் டிரேடிங் தனியார் லிமிட்டடிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட டெல் மடிக் கணனியானது அதன் உத்தரவாத காலத்தினுள் ஏற்பட்ட பழுதுகள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டதாகும்.
சட்டத்தின் 13(1) ஆம் பிரிவின்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் இரண்டு தரப்புக்களும் அழைக்கப்பட்டு விசாரணையினை மேற்கொண்டிருந்தது. அதன்பின்னர் வெளிவந்த விபரங்களின்படி, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 13(4) ஆம் பிரிவின் படி, மடிக் கணனியினைக் கொள்வனவு  செய்த பாவனையாளருக்கு ஏற்பட்ட செலவினைத் திருப்பி வழங்குமாறு குறித்த வியாபாரிக்கு கட்டளையிட்டது.
எவ்வாறாயினும், குறித்த வியாபாரியானவர் மேற்குறித்த கட்டளையினை புறக்கணித்தமையினால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது சட்டத்தின் 13(6) ஆம் பிரிவின்படி குறித்த கட்டளை தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கையொன்றினை முன்வைத்தது. அதற்கிணங்க, நீதிமன்றத்தினால் அக்குறித்த வழக்கானது 2016.05.05 ஆம் திகதியன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் எதிராளி ருபா.79,000/- இனை மடிக் கணனியினைக் கொள்வனவு செய்தவருக்கு வழங்க வேண்டுமென்றும் குறித்த பாதிக்கப்பட்ட தரப்பானது பழுதுகளுடன் கூடிய அத்தகைய மடிக் கணனியினை மேற்குறித்த விற்பனையாளருக்கு மீளவும் கையளிக்க வேண்டுமெனவும் கட்டளையிட்டது.

 

 

 

புதுப்பிக்கப்பட்டது: 25-04-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.