English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எதிராளி

அநுராதபுரம் மேலதிக நீதவான் நீதிமன்றம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எதிராளி எஸ்.ஜே.கொம்பியூட்டர் இன்ஸ்ரிரியூட்

இந்த வழக்கானது அனுராதபுர மாவட்ட செயலகத்தின்  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினைச் சேர்ந்த புலனாய்வு உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பில் குறித்த உத்தியோகத்தர்களினால் எஸ்.ஜே.கொம்பியூட்டர் இன்ஸ்ரிரியூட்டிற்கு வருகை தந்து ருபா 450.00 பெறுமதியான சக்கர கணனிப் பொறியினை (optical wheel mouse) செய்துள்ளதுடன் பற்றுச்சீட்டில் உத்தரவாத காலப்பகுதிக்குரிய கூடானது குறுக்குக் கோடிடப்பட்டிருந்தது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 10(1) ஆம் பிரிவின் கீழ் தொழிற்படுகின்ற, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2011 ஒக்டோபர் 04 ஆம் திகதிய 1726/16 ஆம் இலக்கத்தினால் பிரசுரிக்கப்பட்ட 37 ஆம் இலக்க கட்டளையின் படி, அனைத்து மின்சார மற்றும் / அல்லது இலத்திரனியல் பொருட்கள் / சாதனங்கள் / துணைப் பொருட்களுக்கு ஆகக்குறைந்தது  6 மாத காலப்பகுதிக்கேனும் உத்தரவாத காலப்பகுதியினை வழங்குமாறு அனைத்து மின்சார மற்றும் / அல்லது இலத்திரனியல் பொருட்கள் / சாதனங்கள் / துணைப் பொருட்களின் தயாரிப்பாளர்கள் / வியாபாரிகள் / இறக்குமதியாளர்களுக்கு கட்டளையினைப் பிறப்பித்துள்ளது
எவ்வாறாயினும், குறித்த விற்பனையாளர் சக்கர கணனிப் பொறியினை (optical wheel mouse) உத்தரவாத காலத்தினை வழங்காது விற்பனை செய்துள்ளமையினால், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது குறித்த வியாபாரிக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சார்பில் இரண்டு சாட்சிகள் சாட்சியமளித்துள்ளதுடன் பிரதிவாதி அவரது தரப்பில் சாட்சியாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். நீதிமன்றமானது சாட்சியங்களினை கவனத்தில் கொண்டுள்ளதுடன் எவ்வித நியாயமான சந்தேகமுமின்றி பிரதிவாதி 6 மாத உத்தரவாத காலத்தினை வழங்காது சக்கர கணனிப் பொறியினை (optical wheel mouse) விற்பனை செய்துள்ளதை சந்தேகத்திற்கிடமின்றி தீர்மானித்துள்ளதுடன் பிரதிவாதியானவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார். அதற்கிணங்க, நீதிமன்றமானது ரூபா.3000/- இனை தண்டப்பணமாக விதித்து கட்டளையினைப் பிறப்பித்தது.

புதுப்பிக்கப்பட்டது: 29-04-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.