English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

பொருட்களின் விற்பனையாளர்களுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அறிவுறுத்தல்

பண்டிகை காலப்பகுதியில் மின்சார உபகரணங்கள், துணைப் பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விற்பனையாளர்களுக்கான பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அறிவுறுத்தல்

பாவனையாளர்அலுவல்கள்அதிகாரசபையானது, வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சார உபகரணம், மின்குமிழ்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு பாவனையாளர்களுக்கு அறிவுறுத்துகின்றது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தவிசாளர் கலாநிதி. லலித் செனவீர அவர்கள், வெசாக் பண்டிகை காலப்பகுதியில் தரமல்லாததும் உத்தரவாதமில்லாதுமான மின்சார உபகரணங்கள், வயர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அலங்காரப் பொருட்களினை விற்பனை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகளவில் காபணப்படுவதாக சுட்டிக் காட்டுகின்றார்.

அவர் வெசாக் பண்டிகையின் போது அலங்காரத் தேவைகளுக்கான மின்சாரப் பொருட்கள் மற்றும் அவை சாரந்த துணைப் பொருட்களினைக் கொள்வனவு செய்யும் போது பின்வரும் விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

அனைத்து மின்சார மற்றும் இலத்திரனியல் பொருட்களினையும் விற்பனை செய்யும் போது அவற்றின் அனைத்து தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வழங்குனர்களும் குறித்த பொருட்கள் விற்பனை செய்யயப்படும்அல்லது கொள்வனவாளருக்கு அத்தகைய பொருட்கள் உரிமையாகும் திகதியிலிருந்து ஆகக் குறைந்தது ஆறு மாத காலப்புதிக்குக் குறையாத உத்தரவாத காலப்பகுதியினைக் கொண்டிருப்பதனையும் அத்தகைய பொருட்களின் உத்தரவாதச் சான்றிதழ்களின் நிபந்தனைகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருப்பதனையும் உறுதிப்படுத்துதல் வேண்டும்.

  • • இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் (SLS) குறியீடு இருந்தாலன்றி, பின்வரும் பொருட்களை அவை 250 வோல்ற்றுக்களை விடக் குறைந்திருப்பின், அவற்றின் அனைத்து தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களும் அவற்றினைத் தயாரிக்கவோ, இறக்குமதி செய்யவோ, விநியோகிக்கவோ, களஞ்சியப்படுத்தவோ அல்லது மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்பனை செய்யவோ அல்லது காட்சிப்படுத்தவோ முடியாது.

 

  • பரிமாற்றத்தக்கதான வயர்கள் மற்றும் பரிமாற்றத்தக்கதல்லாத வயர்களுடனான புளக்குகள்
  • சுவிச்சுக்கள் அல்லது சுவிச்சுக்கள் அல்லாத சொக்கற்றுக்கள், மின்சார வெளியிணைப்புக்கள் மற்றும் எடுத்துச் செல்லத்தக்க சொக்கற்றுக்கள்
  • அடப்ரர்கள் மற்றும் தனியான டிரான்ஸ்போமர் அடப்ரர்கள்
  • பியூஸ்கள் பொருத்தப்பட்ட ஒருங்கிணைப்பு அலகுகள் (சுவிச்சுக்கள் பொருத்தப்பட்ட மற்றும் பொருத்தபப்டாதவை)
  • பியூஸ்கள் பொருத்தப்பட்ட டிரான்ஸ்போமர் பிளக்குகள்
  • பிளக்குகள் மற்றும் சொக்கற்றுகள் பொருத்தப்பட்ட கம்பிச் சுற்றுக்கள்

 

  • கீழ்காணும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார வயர்களுக்கு எஸ்எல்எஸ் தர நிர்ணயச் சான்றிதழ் அவசியமானதாகும்

 

  • எஸ்.எல்.எஸ் 733 – காப்பிடப்பட்ட பிவிசி, காப்பிடப்படாத செப்புக் கொண்டக்ரர்களுடனான கம்பிகள் 450/750V உள்ளடங்கலான வோல்ற்றுக்கள் வரையில், மின்சக்திக்கான, ஒளியூட்டுவதற்கான மற்றும் உள்ளக வயறிங் தேவைகளுக்கான வயர்கள்
  • எஸ்.எல்.எஸ் 1143 – வீடு, அலுவலகம் மற்றும் அதனையொத்த இடங்களில் சாதனங்கள் மற்றும் உபகரணங்களினைப் பயன்படுத்துவதற்கான 300/500 V வரையிலான மின்சார நெகிழ்வுத் தன்மை கொண்ட வயர்கள்.

இது தொடர்பில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 011-7755481 அல்லது 1977 எனும் அதிகாரசபையின் தொலைபேசி இலக்கங்களினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறியத்தருமாறு பொதுமக்களைக் கேட்டு்க் கொள்கின்றது.

கலாநிதி.லலித் என்.செனவீர,
தவிசாளர்

 

புதுப்பிக்கப்பட்டது: 13-05-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.