|
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது பாவனையாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் நியாயமான சந்தைப் போட்டியையும் ஏற்படுத்துவதற்காக இலங்கையில் இயங்கிவருகின்ற பிரதானமான நிறுவனமாகும். இது 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்கமுடைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டம் மூலமாகவே தாபிக்கப்பட்டது. பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற அதே வேளையில் பண்டங்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கிடையில் போட்டிநிலைமையைக் கட்டியெழுப்ப அவசியமான சட்;டமுறையான அதிகாரம் சட்டம் மூலமாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. |
|