முறையான சந்தை ஆராய்ச்சி இல்லாமல் பொருளாதாரத்தில் போட்டி நிலையினை மதிப்பீடு செய்ய முடியாது. பல்வேறு பொருட்கள் சேவைகளின் சந்தை நிலைமைகளுடன் தொடர்புடைய தகவல்களை வழங்குவதற்கான அறிக்கைகளை ஆய்வு செய்து பிரசுரிப்பதற்கான அதிகாரமானது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு உரித்தளிக்கப்பட்டுள்ளது. அதிகாரசபையானது, பொதுவான பாவனையாளர் விடயங்கள் அவ்வாறே பல்வேறுபட்ட வர்த்தகர்களுடன் தொடர்புடைய போட்டி நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வினை மேற்கொண்டு வருகின்றது. பொதுவாக, இத்தகைய சந்தை ஆராய்ச்சிகள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்படும்:
இத்தகைய ஆய்வுகளின் காண்புகளின் அடிப்படையில், உரிய சந்தைகளில் போட்டியினை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போட்டி எதிர் புலனாய்வுகளுக்கு சந்தைப் பங்குகள், நெகிழ்வுகள், சந்தை வலு குறிகாட்டிகள் போன்ற சந்தை சூழ்நிலையின் பல்வேறு அளவீடுகளிலான ஆதரவு தேவைப்படுகின்றது. ஆகையால், முறையான அடிப்படையில் பாரிய சந்தைகளிலுள்ள போட்டி சூழ்நிலையினை மதிப்பீடு செயவதற்கும் கண்காணிப்பதற்கும் தேவையானதரவுத் தளத்தினை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.