English (UK)SinhalaSriLanka

சமீபத்திய செய்திகள்

நிருவாக கட்டமைப்பு

பாவனையாளர் அலுவல்கள் பேரவை

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இல. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் மூலம் தாபிக்கப்பட்ட முக்கியத்திவம் வாய்ந்த பொறிமுறைகளில் பாவனையாளர் அலுவல்கள் பேரவையும் ஒன்றாகும்.

பாஅஅ சட்டத்தின் 39 ஆம் பிரிவின்படி, வர்த்தக சட்டம், வியாபார தொழில்முயற்சிகளின் முகாமைத்துவம் மற்றும் வர்த்தக செயற்பாடுகள் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் என்பனவற்றிற்கு மூன்று உறுப்பினர்கள் அமைச்சரினால் நியமிக்கப்படுகின்றார்கள். (பிரிவு.39 (2))

  • அவர்கள் மூன்று வருட காலப்பகுதிக்கு பதவியினை வகிப்பார்கள் – பிரிவு 39(3)
  • அதன் தலைவராக ஒருவர் பெயர் குறிப்பீடு செய்யப்படுவார் – பிரிவு 39(4)
  • பேரவையின் அனைத்து செயற்பாடுகளையும் பதிவு செய்து பேணுவதற்கென செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் – பிரிவு 39 (5).

பேரவையானது அதிகாரசபையினால் இது தொடர்பில் குறிப்பீடு செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து தீர்மானத்தினை மேற்கொள்ளும்.

பேரவையின் சட்ட எல்லையானது பிரதானமாக பின்வரும் விடயங்களைக் கையாளுகின்றது:

  • தயாரிப்பாளர் அல்லது வியாபாரி ஒருவரினால் ஏதேனும் அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுமிடத்து அல்லது ஏதேனும் சேவை கூடிய பெறுமதியில் அளிக்கப்படுமிடத்து அல்ல்து அத்தகைய தயாரிப்பாளர் அல்லது வியாபாரியினால் முறையற்ற வகையில் சந்தை நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகையில்;
    • அத்தகைய பொருட்களின் விற்பனை அல்லது அத்தகைய சேவைகளின் ஏற்பாடுகள் பொதுவான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகையில், அல்லது
    • ஏதேனும் பாவனையாளர்களின் வகையீடானது, அத்தகைய மிகை விலையினால் கணிசமானளவு பாதிப்புக்குள்ளாகையில்.

பணிப்பாளர் நாயகம் அதிகாரசபையுடன் ஆலோசனை மேற்கொண்டு அத்கைய விடயத்தினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பேரவையினைக் கோரலாம்.

  • எவரேனும் உறுப்பினர்/நிறுவனம் விற்பனை செய்யப்படுகின்ற பொருட்கள் அல்லது வழங்கப்படுகின்ற சேவையானது அதிகூடிய விலையில் மேற்கொள்ளப்படுவதாக கருதுமிடத்து, அத்தகைய விடயம் தொடர்பில் புலனாய்வினை மேற்கொள்ளுமாறு அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு வேண்டுகோள் விடுக்கலாம். பணிப்பாளர் நாயகம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு பேரவையினைக் கோரலாம். (பிரிவு 22).
  • பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் கீழ் தற்போதிருக்கும் போட்டி எதிர் செய்றபாடுகள் குறித்து புலனாய்வு செய்து தீர்மானிக்லாம்.
  • அதிகாரசபையானது போட்டி எதிர் செயற்பாடுகளுக்மைவாக அதன் புலனாய்வினை நிறைவு செய்கையில் அதிகாரசபையானது பேரவையின் முடிவுக்காக அதனை சமர்ப்பிக்காமலிருக்கவும் முடிவெடுக்கலாம். அத்தகைய விண்ணப்பத்தினை மேற்கொண்ட தரப்பு அத்தகைய விண்ணப்பத்தினை ஆராய்ந்து முடிவெடுக்குமாறு பேரவைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கலாம்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை

வரலாறு

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது 2003 மார்ச் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்ட 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் மூலம் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களுக்கமைவாக 2003 ஜூலையிலிருந்து அதன் தொழிற்பாடுகளை ஆரம்பித்தது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டமானது, 1979 ஆம் அண்டின் 1 ஆம் இல. பாவனையாளர் பாதுகாப்பு சட்டம், 1987 ஆம் ஆண்டின் 1 ஆம் இல. நியாய வியாபார ஆணைக்குழு சட்டம் மற்றும் 1950 ஆண்டின் விலை கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகியன இரத்துச் செய்யப்பட்டு நியாய வியாபார ஆணைக்குழு மற்றும் உள்நாட்டு வர்த்தக திணைக்களம் ஒழிக்கப்பட்டும் அவற்றிற்குப் பதிலாக அதிகாரசபையானது தாபிக்கப்பட்டது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது, சட்டத்தின் கீழ் அதிகாரசபையின் நோக்கங்களையும் இலக்குகளையும் அடையும் பொருட்டு, தலைவர் மற்றும் கைத்தொழில், சட்டம், பொருளாதாரம், வர்த்தகம், நிருவாகம், கணக்கியல், விஞ்ஞானம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 10 உறுப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தலைவருக்கு மேலதிகமாக 3 முழு நேர உறுப்பினர்களை நியமிக்கும் வகையிலான அதிகாரம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகாரசபையின் செயலாளராக தொழிற்படுமாறு வேண்டப்படுகின்ற பணிப்பாளர் நாயகம், அதிகாரசபையின் அனைத்து தொழிற்பாடுகளுக்கும் பொறுப்பாக பிரதம நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றுகின்றார்.

புதுப்பிக்கப்பட்டது: 15-05-2024
காப்புரிமை © 2024 பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை. முழுப் பதிப்புரிமை உடையது.
வடிவமைப்பு: Pooranee Inspirations.